/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் பணிநிரவல் இடங்கள் காலியில்லை
/
ஆசிரியர் பணிநிரவல் இடங்கள் காலியில்லை
ADDED : ஜூலை 09, 2025 10:24 PM
கோவை; இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், கோவை கல்வி மாவட்டத்தில் காலியாக இருந்த இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
2025 -26 கல்வியாண்டில், இடைநிலை ஆசிரியர்களுக்கான நேரடி நியமனம், பொதுமாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வானது, இம்மாதம் 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், கோவை கல்வி மாவட்டத்தில், ஒன்றியத்திற்குள் பணிநிரவல் கலந்தாய்வில் இருந்த 6 இடங்களும், வருவாய் மாவட்டத்திற்குள் இருந்த 9 பணிநிரவல் இடங்களும், உபரி ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளன.
இதே நேரத்தில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வில், வால்பாறை - 42, சுல்தான்பேட்டை-9, கிணத்துக்கடவு-3, பொள்ளாச்சி வடக்கு -6 என 60 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு, கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இதில் கோவை கல்வி மாவட்டத்தில் மொத்தம் 18 பணியிடங்கள் உள்ளன. ஜூலை 7ம் தேதி நடைபெற்ற கலந்தாய்வில், ஒருவர் விண்ணப்பித்திருந்தாலும், அவர் பங்கேற்காததால், அந்த இடமும் காலியாகவே உள்ளது.