/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'லிப்ட்' இருக்கு... ஆனா இல்லை! நகர்ப்புற வாரிய குடியிருப்புவாசிகள் அவஸ்தை
/
'லிப்ட்' இருக்கு... ஆனா இல்லை! நகர்ப்புற வாரிய குடியிருப்புவாசிகள் அவஸ்தை
'லிப்ட்' இருக்கு... ஆனா இல்லை! நகர்ப்புற வாரிய குடியிருப்புவாசிகள் அவஸ்தை
'லிப்ட்' இருக்கு... ஆனா இல்லை! நகர்ப்புற வாரிய குடியிருப்புவாசிகள் அவஸ்தை
ADDED : அக் 16, 2024 10:13 PM
கோவை: செல்வபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடிநீர் வசதியில்லை; லிப்ட் இருந்தாலும் பயன்பாட்டில் இல்லை.
கோவை செல்வபுரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் இருக்கிறது. இதற்கு எதிரே, 112 வீடுகளுடன் ஆறு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு இருக்கிறது.
கடந்த மே மாதம் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டது. குடியிருப்பை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்கப்படவில்லை. சாக்கடை கால்வாய் மேனுவல் எப்போதும் திறந்தே கிடக்கிறது. குடியிருப்பை சுற்றிலும் புதர்மண்டி கிடக்கிறது.
மழை நீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுத்தொல்லை அதிகரித்திருக்கிறது; நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. குடிநீர் வசதியில்லை. மாடியில் இருப்பவர்கள், படிக்கட்டு வாயிலாகவே இறங்கி வர வேண்டும்.
லிப்ட் இருந்தாலும் இயங்குவதில்லை. வாட்ச்மேன் இல்லாததால், குடியிருப்புக்குள் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம்.
குடியிருப்போர் கூறுகையில், 'குடிநீர் தேவையெனில், தரைத்தளத்துக்கு வர வேண்டும். உப்புத்தண்ணீரும் அவ்வப்போது நின்று விடுகிறது. துணி துவைக்கும்போது தண்ணீர் வராவிட்டால், கீழே இறங்கி வந்து, துவைத்துச் செல்ல வேண்டியுள்ளது.
ஜன்னல்களுக்கு கண்ணாடி இல்லை. மழை பெய்தால் வீட்டுக்குள் சாரல் அடிக்கிறது. இன்னும் பல வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. மாடி வீடுகளுக்கு தண்ணீரை சுமந்து எடுத்துச் செல்ல முடிவதில்லை. குடிநீர் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்; சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும்' என்றனர்.
இப்பிரச்னை தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ., கட்சி தொண்டாமுத்துார் தொகுதி மேற்கு மத்திய மாவட்டம் சார்பாக, தொகுதி தலைவர் ஜாபர் சாதிக் தலைமையில் அக்கட்சியினர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் மாடசாமியை சந்தித்து, மனு கொடுத்தனர்.