/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளம் இருக்கு... சுகாதாரம் இல்லை இருக்கு...ஆனா இல்லை! 'பார்க்' இருக்கு...'பார்க்கிங்' இல்லை மாநகராட்சி கவனிச்சா தேவலை!
/
குளம் இருக்கு... சுகாதாரம் இல்லை இருக்கு...ஆனா இல்லை! 'பார்க்' இருக்கு...'பார்க்கிங்' இல்லை மாநகராட்சி கவனிச்சா தேவலை!
குளம் இருக்கு... சுகாதாரம் இல்லை இருக்கு...ஆனா இல்லை! 'பார்க்' இருக்கு...'பார்க்கிங்' இல்லை மாநகராட்சி கவனிச்சா தேவலை!
குளம் இருக்கு... சுகாதாரம் இல்லை இருக்கு...ஆனா இல்லை! 'பார்க்' இருக்கு...'பார்க்கிங்' இல்லை மாநகராட்சி கவனிச்சா தேவலை!
UPDATED : ஜன 14, 2024 02:40 AM
ADDED : ஜன 13, 2024 11:32 PM

கோவை:கோவையில் தியேட்டர்கள், ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள், மால்கள், உணவு திருவிழாக்கள்... இப்படி மக்கள் பொழுதுபோக்க ஏராளமான சமாச்சாரங்கள் வந்து விட்டபோதும், இங்கெல்லாம் செல்லும் வாகனங்கள், பார்க் செய்ய போதுமான வசதி இல்லாததுதான் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது.
கோவையில் இப்போது எட்டுத் திக்கில் எந்தப் பக்கம் எட்டு வைத்தாலும், பொழுது போக்க ஏதாவது ஓரிடம் இருக்கிறது.
புரூக்பீல்ட்ஸ் மால், புரோசோன் மால், ரிபப்ளிக் மால் என சந்தோஷமாக 'ஷாப்பிங்' செய்யவும் 'மால்'கள் நிறைய வந்துவிட்டன.
கோவை நகரிலுள்ள பல ஜவுளிக்கடைகளும், டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் பல மாடிகளில், பல்லாயிரம் சதுர அடிகளில், ஒரு குடும்பத்துக்கு ஒரு நாள் முழுக்க 'ஷாப்பிங்' செய்யுமளவுக்கு பரந்து விரிந்து நிற்கின்றன. அதேபோல, சைவம், அசைவம் என கலந்து கட்டி விருந்து படைக்கவும் விதவிதமான ஓட்டல்கள், 'புட் ஸ்ட்ரீட்'கள் இருக்கின்றன.
படுத்தபடி படம் பார்க்கலாம்!
ஒரு தியேட்டர், இரட்டை தியேட்டரெல்லாம் காலாவதியாகி, இப்போது 9 தியேட்டர், 10 ஸ்கிரீன், படுத்துக் கொண்டு படம் பார்க்கும் தியேட்டர் என அதிநவீன தியேட்டர்களும், 'மல்டி பிளக்ஸ்' காம்ப்ளக்ஸ்களும் சினிமா ரசிகர்களை, இழுத்துக் கொண்டிருக்கின்றன.
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் துவங்கி, அரசு பொருட்காட்சி என ஆண்டு முழுவதும் கண்கவர் கண்காட்சிகள், பொருட்காட்சிகள் நடக்கின்றன. புத்தகத் திருவிழா, உணவுத்திருவிழா என கொடிசியா வளாகமும், மைதானமும் விடுமுறை நாட்களை, விழாக்களால் நிறைகின்றன. அறுசுவை விருந்து படைக்கும் உணவுத்திருவிழாக்கள் நடக்கின்றன.
வருகிறது செம்மொழி பூங்கா
சில ஆண்டுகளில், சிறைச்சாலை மைதானமும் செம்மொழிப் பூங்கா என்ற மாபெரும் பொழுது போக்கிடமாக மாறப்போகிறது. அதற்கும் முன்னோட்டமாக, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவையிலுள்ள குளங்கள் பலவற்றிலும், பூங்கா, படகு இல்லம், ரெஸ்டாரன்ட், அனுபவ மையம் என மக்களுக்கேற்ற பொழுது போக்கிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.
ரேஸ்கோர்ஸ், டி.பி.ரோடு ஆகியவை, இதே திட்டத்தில் மாதிரிச்சாலைகளாக, பல வேலைப்பாடுகளுடன் மக்களை ஈர்த்து, 'செல்பி' சென்டர்களாக மாறியுள்ளன.
இவ்வாறு எங்கெங்கு காணினும், இப்போது பொழுது போக்குவதற்கு, கோவை மக்களுக்குப் பஞ்சமில்லை என்கிற அளவுக்கு நிறைய இடங்கள், நிகழ்ச்சிகள், வாய்ப்புகள் வந்து விட்டன.
வார இறுதி நாட்களில் பார்த்தால், எங்கே பார்த்தாலும் கூட்டம், எல்லா ரோட்டிலும் டிராபிக் ஜாம்...இப்போதைய பெரிய பிரச்னை, இத்தனை மக்கள் வரும் வாகனங்களுக்குமான 'பார்க்கிங்' தான்.
இப்போதே திட்டமிட வேண்டும்
ரேஸ்கோர்ஸ் பகுதியில், 'பார்க்' ஆக இருந்த இடமெல்லாம்,கடைகளுக்கு 'பார்க்கிங்' ஆக மாற்றப்பட்டு விட்டன.
ஆனால் குளங்களுக்கும், மாதிரிச்சாலைகளுக்கும் வரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, கார்களையும், டூ வீலர்களையும் நிறுத்துவதற்கு இடமின்றி அல்லாடுவது அப்பட்டமாகத் தெரிகிறது. வரும் நாட்களில், கோவையில் 'பார்க்கிங்' பிரச்னை பெரிதாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.
எனவே, இப்போதே அதற்குத் திட்டமிடல் மிக முக்கியம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், குளங்களை மேம்படுத்தி விட்டு, கழிவுநீரைச் சுத்திகரிக்காமல், சாக்கடை சங்கமமாக்கி வைத்திருப்பது போல, பொழுது போக்கிடங்களை உருவாக்கி விட்டு, 'பார்க்கிங்' அமைக்காமலிருப்பது, 'பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்' என்பதைப் போலாகிவிடும்!

