/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாலுகா அலுவலகம் முன் 'செல்பி பாயின்ட்' இருக்கு
/
தாலுகா அலுவலகம் முன் 'செல்பி பாயின்ட்' இருக்கு
ADDED : மார் 20, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;லோக்சபா தேர்தல் நெருங்கும் தருவாயில், கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் முன் 'செல்பி பாயின்ட்' மற்றும் கையெழுத்து பலகை வைக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 'செல்பி பாயின்ட்' மற்றும் கையெழுத்து பலகை வைக்கப்பட்டுள்ளது. நுாறு சதவீத ஓட்டுப்பதிவு மற்றும் இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த, 'செல்பி பாயின்ட்'டில், கிணத்துக்கடவு தாலுகா அலுவலக பணியாளர்களுடன் தாசில்தார் சிவகுமார், செல்பி எடுத்து கொண்டார். கையெழுத்து பலகையில் தாசில்தார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கையெழுத்திட்டனர்.

