sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலம் இருக்கு; பூங்கா இல்லை 42 ஆண்டுகளாக இதே நிலை  நகராட்சியும் கண்டுகொள்வதில்லை

/

நிலம் இருக்கு; பூங்கா இல்லை 42 ஆண்டுகளாக இதே நிலை  நகராட்சியும் கண்டுகொள்வதில்லை

நிலம் இருக்கு; பூங்கா இல்லை 42 ஆண்டுகளாக இதே நிலை  நகராட்சியும் கண்டுகொள்வதில்லை

நிலம் இருக்கு; பூங்கா இல்லை 42 ஆண்டுகளாக இதே நிலை  நகராட்சியும் கண்டுகொள்வதில்லை


ADDED : மார் 13, 2024 10:35 PM

Google News

ADDED : மார் 13, 2024 10:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை நகராட்சி, பழநி ரோட்டில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சார்பில், 1982ல், அண்ணா குடியிருப்பு உருவாக்கப்பட்டது. 650க்கும் மேற்பட்ட வீடுகளில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதன் அருகிலேயே, காந்திநகர், ஜோதிநகர் என குடியிருப்புகள் உருவாகி, வளர்ச்சியடைந்துள்ளது.

குடியிருப்பு உருவாகி, 42 ஆண்டுகள் ஆன நிலையில், வசிக்கும் மக்களுக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட, பூங்கா, விளையாட்டு மைதானம், பொது பயன்பாட்டு இடங்கள் பயன்படுத்தாமல், புதர் மண்டிக்காணப்படுகிறது.

மூன்று இடங்களில், 2 ஏக்கருக்கு மேல், பொது பயன்பாட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், மக்களுக்கு பயன்படாமல், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பூங்கா மற்றும் இளைஞர்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்த மைதானம் அமைக்க வேண்டும், என இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

மழைநீர் வடிகால் இல்லை


அதே போல், மழைக்காலங்களில், உடுமலை பகுதிகளில் பெய்யும் மழை நீர், இக்குடியிருப்பு வழியாக வெளியேறுகிறது, முறையான மழை நீர் வடிகால் வசதிகள் செய்யப்படாததால், மழை பெய்தால், நீர் தேங்கும் பகுதியாக உள்ளது. மழை நீர் வடிகால் வசதிகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த குடியிருப்பு பகுதியில், பிரதான ரோடுகள், பிரிவு ரோடுகள் என, 30க்கும் மேற்பட்ட ரோடுகள் உள்ளன. ரோடுகள் முறையாக பராமரிக்காமல், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்கியபோது தோண்டப்பட்ட குழிகள் மற்றும் இத்திட்டத்தின் ஆளிறங்கும் குழி மூடிகள் முறையாக அமைக்கப்படாததால், ரோடு மிகவும் மோசமாக மாறியுள்ளது. முழுமையாக ரோடுகளை புதுப்பிக்க வேண்டும்.

நகராட்சி துாய்மைப்பணியாளர்கள் முறையாக வீடுகள் தோறும் வந்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிப்பதில்லை. இதனால், பொது இடங்கள், ரோட்டோரங்கள் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

ஒரு சில பகுதிகளில், சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவுகளையும், பொது இடங்களில் கொட்டி தீ வைப்பதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

அதே போல், நகர பகுதிகளில் அகற்றப்படும் சாக்கடை கழிவுகள், லாரிகளில் கொண்டு வந்து, பிரதான ரோட்டோரத்தில், நீர் செல்லும் ஓடையை அழிக்கும் வகையில் கொட்டப்பட்டு வருகிறது.

இதனால், நீர் வழித்தடம் பாதிப்பதோடு, சுகாதார கேடு, கண்ணாடி கழிவு உள்ளிட்ட திடக்கழிவுகளால் மக்கள் பாதித்து வருகின்றனர்.

அண்ணா குடியிருப்பு பகுதியில், 42 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, பயன்படுத்த முடியாமல், பழுதடைந்து காணப்படுகிறது.

பல ஆண்டுகளாக காந்திநகர் பகுதியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, இடித்து அகற்றப்படாமல், ஆபத்தான நிலையில் உள்ளது.

சிதிலமடைந்த ரேஷன்கடை


இதற்கு கீழ் அமைந்திருந்த, அறையில் தற்போது ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி, ரேஷன் கடை கட்டடம் சிதிலமடைந்து, எந்நேரமும் விழும் நிலையில் உள்ளது. எனவே, இவற்றை அகற்றி, புதிதாக ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

உடுமலை - பழநி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, அண்ணா குடியிருப்பு உட்பட, 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதே போல், இந்த ரோட்டில், 5 தனியார் பள்ளி, கல்லுாரிகள் அமைந்துள்ளன.

பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவிகள் ரோட்டை கடக்கும் போது, விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

மையத்தடுப்புகள் அமைக்கணும்


எனவே, கொழுமம் ரோடு பிரிவு முதல், பெரிய கோட்டை பிரிவு வரை மையத்தடுப்புகள் அமைக்கவும், குடியிருப்பு மற்றும் பள்ளி கல்லுாரி மாணவர்கள் எளிதாக கடக்கும் வகையில். வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும், என அண்ணா குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us