/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் விலையில் மாற்றம் இல்லை
/
வாழைத்தார் விலையில் மாற்றம் இல்லை
ADDED : ஜன 01, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து சராசரியாகவும், விலையில் பெரிய மாற்றம் இன்றியும் உள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டுக்கு, வாழைத்தார் மற்றும் வாழை இலை போன்ற விளை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு உடனுக்குடன் விற்பனையாவதால் வியாபாரிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. தற்போது, கிணத்துக்கடவு மார்க்கெட்டில், வாழைத்தார் வரத்து சராசரியாகவும், விலையில் பெரிய மாற்றம் இல்லை என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதில், நேந்திரன் (கிலோ) 18 - 20; கதலி 20 - 25; செவ்வாழை - 40, சாம்பிராணி - 25, பூவன் - 20 ரூபாய்க்கு விற்பனையானது.

