/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு குடிநீர் இல்லை
/
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு குடிநீர் இல்லை
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு குடிநீர் இல்லை
காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு குடிநீர் இல்லை
ADDED : மே 20, 2025 12:06 AM

கோவை; காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கென, வைக்கப்பட்டுள்ள குடிநீர் வாட்டர் கூலர், பல மாதங்களாக பழுதான நிலையில் இருப்பதால், பயணிகள் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
கோவை, காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டண்டில் இருந்து, நீலகிரி, சத்தியமங்கலம், கோபி, திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு, 100 க்கும் பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் ஸ்டாண்டில் கத்திருந்து, தினமும் பல ஆயிரம் பயணிகள் பஸ் பிடித்து பயணம் செய்கின்றனர்.
இங்குள்ள நான்கு பிளாட் பாரங்களில், மூன்று பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு என, குடிநீர் வசதி செய்யப்படவில்லை. ஒரு பிளாட்பாரத்தில் மட்டும், ஒரு வாட்டர் கூலர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்டர் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. பஸ்சுக்காக காத்திருக்கும் வெளியூர் செல்லும் பயணிகள், தாகத்துக்கு தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். அதனால், பிளாட் பாரங்களில் பயணிகள் தாகம் தணிக்க, குடிநீர் கேன்கள் அல்லது வாட்டர் கூலர்கள் வைக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.