/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாடிவயல் யானைகள் முகாமில்... யானை இல்லை:திறந்து ஒரு மாதமாக போகிறது
/
சாடிவயல் யானைகள் முகாமில்... யானை இல்லை:திறந்து ஒரு மாதமாக போகிறது
சாடிவயல் யானைகள் முகாமில்... யானை இல்லை:திறந்து ஒரு மாதமாக போகிறது
சாடிவயல் யானைகள் முகாமில்... யானை இல்லை:திறந்து ஒரு மாதமாக போகிறது
ADDED : ஜன 24, 2026 05:02 AM

தொண்டாமுத்தூர்:சாடிவயலில், பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய, புதிய யானைகள் முகாமை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து ஒரு மாதம் ஆக போகிறது. இன்னும் ஒரு யானைகூட கொண்டு வரப்படாததால், நிஜமாகவே யானைகள் முகாம் இங்கு செயல்படுமா என சந்தேகம் எழுப்புகின்றனர் உள்ளூர் மக்கள்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட சாடிவயலில், 8 கோடி ரூபாய் செலவில், யானைகள் முகாம் அமைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, 50 ஏக்கர் பரப்பளவில், 18 புதிய யானைகள் ஷெட், 2 கரால், இரண்டு கி.மீ., தொலைவிற்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், 3 சிறிய குட்டைகள், 8 மாவுத் மற்றும் பாகன்களுக்கான தங்கும் விடுதிகள், 20 இடங்களில் தண்ணீர் வசதி, 5 யானைகள் குளிப்பதற்கான ஷவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, போர்வெல், சி.சி.டி.வி., கேமராக்கள், யானைகள் முகாமை சுற்றி அகழி அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம், 30ம் தேதி கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி, காணொலி காட்சி மூலம் சாடிவயல் யானைகள் முகாமை திறந்து வைத்தார். ஆனால், திறந்து ஒரு மாதமாகும் நிலையில், தற்போது வரை ஒரு யானை கூட முகாமுக்கு கொண்டு வரப்படவில்லை.
இந்த முகாமுக்கு கும்கி யானைகளை கொண்டு வந்தால், கோவை வனக்கோட்டத்தில், காட்டு யானைகளை கட்டுப்படுத்த, முது மலை, டாப்சிலிப் பகுதிகளில் இருந்து கும்கி யானை கொண்டு வருவதற்கு பதிலாக, இங்கிருந்தே கொண்டு செல்லலாம்.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில், யானைகள் கொண்டுவர, முதன்மை வனக்காப்பாளரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும், யானைகள் கொண்டு வரப்படும்,என்றார்.

