/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இறந்த பின் 'கணக்கு' பார்க்க வேண்டாமே!
/
இறந்த பின் 'கணக்கு' பார்க்க வேண்டாமே!
ADDED : ஜூலை 30, 2025 09:02 PM
கோவை: ஓய்வூதியதாரர்கள் இறக்கும் போது, அம்மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்கப்படாமல், இறந்த தேதி கணக்கிடும் முறை கைவிடப்பட வேண்டும்.
அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு, அவர்களின் நிலைக்கு ஏற்றவாறு ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்தால், இறந்த தேதியை கணக்கிட்டு ஓய்வூதியம் நிறுத்தப்படுவதற்கு, அதிருப்தி எழுந்துள்ளது.
சுகாதாரத்துறை போக்குவரத்து ஓய்வூதியர் நலச்சங்க மாநில பொருளாளர் நாகராஜன் கூறுகையில், ''ஓய்வூதியதாரர்கள் இறக்கும் போது, அம்மாத ஓய்வூதியம் வழங்க தேதியை, தமிழக அரசு கணக்கிடுகிறது. உதாரணமாக, 5ம் தேதி இறந்தால், ஐந்து நாட்களுக்கான ஓய்வூதியம் மட்டுமே வழங்குகின்றனர்.
பல ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினர், ஓய்வூதியத்தை மட்டுமே நம்பியுள்ளனர். இறக்கும் தருவாயில், ஊதியம் இவ்வாறு கணக்கிடுவது சரியல்ல. கேரள அரசை போன்று, ஓய்வூதியதாரர்கள் இறக்கும் போது, தேதி கணக்கிடாமல் அம்மாதத்துக்கான முழு ஓய்வூதியத்தொகையை அக்குடும்பங்களுக்கு விடுவிக்க வேண்டும்,'' என்றார்.