/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஹைடெக்' ஆய்வகம் இருந்து என்ன செய்ய கற்பிக்க தகுதியான பயிற்சியாளர் இல்லையே!
/
'ஹைடெக்' ஆய்வகம் இருந்து என்ன செய்ய கற்பிக்க தகுதியான பயிற்சியாளர் இல்லையே!
'ஹைடெக்' ஆய்வகம் இருந்து என்ன செய்ய கற்பிக்க தகுதியான பயிற்சியாளர் இல்லையே!
'ஹைடெக்' ஆய்வகம் இருந்து என்ன செய்ய கற்பிக்க தகுதியான பயிற்சியாளர் இல்லையே!
ADDED : மே 19, 2025 11:53 PM
கோவை; கோவை மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, 'ஹைடெக் லேப்கள்' அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஆய்வகங்களில் பயிற்சி வழங்க பயிற்சியாளர்கள், போதியளவில் இல்லாததால், பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு பயிற்சி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், 2,996 அரசு நடுநிலை மற்றும் 540 உயர்நிலைப்பள்ளிகளில், ரூ.175 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
உயர்நிலைப்பள்ளிகளில் 20 கணினிகளும், நடுநிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும் கொண்ட ஹைடெக் ஆய்வகங்கள், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வகங்களை பராமரிக்கவும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், தனியார் முகமைகளின் மூலம், 6,454 பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 165 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், தற்போது இந்த ஆய்வகங்களில் கணிசமான எண்ணிக்கையில் பயிற்சியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கோவையில் உள்ள பல்வேறு பள்ளிகளில் லேப் பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிலர், தனிப்பட்ட காரணங்களால் பணியில் சேர்ந்த பிறகு விலகியுள்ளனர். தற்போது அந்த இடங்களை நிரப்புவதற்கான பணி நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்குள் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என்றார்.