/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
/
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 12, 2025 01:40 AM
பொள்ளாச்சி; ''தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்த உதவாமல், மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது,'' என, பொள்ளாச்சியில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே தெரிவித்தார்.
தென்னை நார் உற்பத்தியாளர்களுடன் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி பொள்ளாச்சி அருகே நடந்தது.
இதில், பங்கேற்ற சிறு, குறு நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் ேஷாபா கரந்த்லஜே, நிருபர்களிடம் கூறியதாவது:
சிறு, குறு, நடுத்தர தொழில், இந்தியாவின் முதுகெலும்பு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இத்தொழில் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கயிறு வாரியத்தின் வாயிலாக மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
சிறு, குறு நடுத்தர தொழில் மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
தமிழகத்தில், சிறு,குறு, நடுத்தர தொழில், மின்கட்டணம் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு வருகிறது. மானியம் வழங்குவதில்லை, மின் கட்டணம் குறைப்பதும் இல்லை. சிறு,குறு, நடுத்தர தொழில் மேம்படுத்த தமிழக அரசு எவ்வித உதவியும் செய்வதில்லை.
சிறு, குறு தொழில்களை மேம்படுத்த எவ்வித அக்கறையும் செலுத்தாத அரசு, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. தமிழகத்துக்கு வழங்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்துவதில்லை. அரசுக்கு கிடைக்கும் நிதியை கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்துவதாக கூறுகின்றனர். எதுவும், முறையாக செயல்படுத்தியதாக தெரியவில்லை. எனவே, அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில், லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. போதைப்பொருட்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறுகின்றனர். ஆனால், அது பாதி பெண்களுக்கு கிடைப்பதில்லை. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் அனுமதித்த அவர்களே, 'ஓசி' பஸ் எனக்கூறுகின்றனர்.
இவ்வாறு, கூறினார்.