/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தார் சாலைக்கான சுவடே இல்லை; அதிகாரிகள் அலட்சியத்தால் அவதி
/
தார் சாலைக்கான சுவடே இல்லை; அதிகாரிகள் அலட்சியத்தால் அவதி
தார் சாலைக்கான சுவடே இல்லை; அதிகாரிகள் அலட்சியத்தால் அவதி
தார் சாலைக்கான சுவடே இல்லை; அதிகாரிகள் அலட்சியத்தால் அவதி
ADDED : அக் 01, 2024 11:01 PM

ஆனைமலை ; பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்குச் செல்லும், வெப்பரை ரோட்டை சீரமைக்கக் கோரி முறையிட்டும் பலனில்லை என, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பழங்குடியின மக்கள் வசிக்கும் வெப்பரை, முதலியார்பதி, காளியாபுரம், காக்காகொத்திபாறை, துண்டுக்கடவுபதி, சுள்ளிமேட்டுப்பதி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
சுற்றுப்பகுதி முழுவதும் விவசாய நிலங்களாக உள்ளதால், அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளுக்கு முன், தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து, சாலையை சீரமைக்கவோ, புனரமைக்கவோ துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், தற்போது, அந்த சாலை குண்டும் குழியுமாக மாறி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அவசர தேவைக்காக செல்லும் மக்கள், கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், முதியவர்கள் சொந்த வாகனங்களில் சென்றாலும், உரிய நேரத்திற்குள் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.
மக்கள் கூறியதாவது:
தார் சாலை இருந்ததற்கான சுவடே அறியாத வகையில், வழித்தடம் உள்ளது. சாலையில் பள்ளங்கள் அதிகரித்துள்ளதால், வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றனர். இந்த சாலையை சீரமைக்க, அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுப்பதில்லை.
கலெக்டர் ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம், சாலையை புதுப்பிக்க உத்தரவிட வேண்டும்.அப்போது தான், மக்கள் நிம்மதியாக சென்று வர முடியும்.
இவ்வாறு, கூறினர்.