/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளை பிரிப்பதில் வெளிப்படை தன்மை இல்லை; ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் புகார்
/
ஊராட்சிகளை பிரிப்பதில் வெளிப்படை தன்மை இல்லை; ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் புகார்
ஊராட்சிகளை பிரிப்பதில் வெளிப்படை தன்மை இல்லை; ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் புகார்
ஊராட்சிகளை பிரிப்பதில் வெளிப்படை தன்மை இல்லை; ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் புகார்
ADDED : டிச 18, 2024 08:40 PM
அன்னுார்; ''ஊராட்சிகளை தரம் உயர்த்துவதிலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பதிலும், வெளிப்படை தன்மை இல்லை,'' என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12,500 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 99 ஆயிரம் வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இத்துடன் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் என மொத்தம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு சில மாநகராட்சிகளை விரிவுபடுத்தி, அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரமேஷ் குமார் கூறியதாவது:
பல ஊராட்சிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அவற்றை பிரிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்கள் நிர்வாகம் செய்ய முடியாத அளவு விரிவடைந்துள்ளன. அவற்றையும் பிரிக்க வேண்டும்.
இதற்கு பொதுமக்கள், சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள், ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து அவர்களிடம் தரம் உயர்த்துதல், பிரித்தல், இணைத்தல் குறித்து கருத்து கேட்க வேண்டும்.
இதற்கென ஒரு ஆணையம் அமைக்க வேண்டும். அந்த ஆணையத்தின் வாயிலாக ஒவ்வொரு ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அதன் பிறகு ஊராட்சிகளை பிரிப்பது, நகர்ப்புற அமைப்புகளுடன் இணைப்பது, தரம் உயர்த்துவது ஆகியவற்றை முடிவு செய்ய வேண்டும்.
தற்போது தன்னிச்சையாக இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. கிராம ஊராட்சிகளை தன்னிச்சையாக தரம் உயர்த்துதல், இணைத்தல் ஆகியவற்றால் கிராம ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிக்கும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக இதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்.இதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.