/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லை; பாதிப்புக்குள்ளாகும் மாணவியர்
/
கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லை; பாதிப்புக்குள்ளாகும் மாணவியர்
கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லை; பாதிப்புக்குள்ளாகும் மாணவியர்
கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லை; பாதிப்புக்குள்ளாகும் மாணவியர்
ADDED : மார் 24, 2025 11:03 PM

வால்பாறை; வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ளது அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இந்தப்பள்ளியில் தற்போது, 270 மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் மாணவியர் பயன்பாட்டிற்காக இரண்டு கழிப்பிடங்கள் உள்ளன.
இதில் ஒரு கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதனால், ஒரே கழிப்பிடத்தை தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு, கழிப்பிடம் அருகில் உள்ள சத்துணவு மையத்தில் உணவு சமைக்க முடியாத நிலை உள்ளது.
மேலும், மாணவியர் மதியம் உணவு உட்கொண்ட பின், கை கழுவ தண்ணீர் வசதியும் இல்லை. இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் காட்சிப்பொருளாக உள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் உடனடியாக பள்ளியை ஆய்வு செய்து, தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது, மாணவியரின் கோரிக்கையாக உள்ளது.