/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயான வழித்தடத்தில் தண்ணீர் உடல்களை எடுத்துச் செல்ல வழிஇல்லை
/
மயான வழித்தடத்தில் தண்ணீர் உடல்களை எடுத்துச் செல்ல வழிஇல்லை
மயான வழித்தடத்தில் தண்ணீர் உடல்களை எடுத்துச் செல்ல வழிஇல்லை
மயான வழித்தடத்தில் தண்ணீர் உடல்களை எடுத்துச் செல்ல வழிஇல்லை
ADDED : ஆக 10, 2025 10:41 PM

மேட்டுப்பாளையம், ; பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 101 அடியை எட்டியதால் மயானத்திற்கு செல்லும் வழித்தடம் தண்ணீரில் மூழ்கியது.
சிறுமுகை அருகே நீலிபாளையம் சாலையில் உள்ள பெள்ளேபாளையம், நால் ரோட்டில் உள்ள குடியிருப்புகள், பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இந்தப் பகுதி மக்களுக்கு, சிறுமுகை - மேட்டுப்பாளையம் சாலையில் நீலிபாளையம் சாலை ரவுண்டானா அருகே உள்ள மேடான பகுதியில், மயானத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு இறந்தவர்களின் உடல்களை புதைத்தும், எரி கொட்டகையில் எரித்தும் வந்தனர்.
தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 101 அடியை எட்டியுள்ளது. அணையின் தேக்கத் தண்ணீர் சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு, மூலத்துறை வரை பவானி ஆற்றில் தேங்கியுள்ளது. அணையின் தேக்க தண்ணீர், பெள்ளேபாளையம் ஊராட்சி மயானத்தை சுற்றியும், செல்லும் வழித்தடத்திலும் தேங்கியுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை, பெள்ளேபாளையம் கிராம மக்கள், மயானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.