/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'எங்கள் வார்டிலும் வேலை நடக்கவில்லை'
/
'எங்கள் வார்டிலும் வேலை நடக்கவில்லை'
ADDED : ஆக 07, 2025 09:35 PM

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை நகர் மன்ற கூட்டம் நேற்று தலைவர் உஷா தலைமையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-
விக்னேஷ் (பா.ஜ.,): காரமடை நகராட்சியை பற்றி ஆளுங்கட்சி கவுன்சிலர்களே அதிக குறைகளை சொல்கின்றனர். ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நகராட்சியின் செயல்பாடுகள் உள்ளன. காரமடை மின் மியானம் பல மாதங்களாக செயல்பாட்டில் இல்லை. தகனம் செய்ய முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வனிதா (அ.தி.மு.க.): 27வது வார்டில் 147 மீட்டர் தார் சாலை அமைக்க வேண்டும். ஆனால் 140 மீட்டர் தான் அமைக்கப்பட்டுள்ளது. 7 மீட்டர் ஊழல் நடந்துள்ளது.
பிரியா (மா.கம்யூனிஸ்ட்): தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்துவதால் மக்கள் பிரச்னை பற்றி பேச முடிவது இல்லை
ராம்குமார் (தி.மு.க.,): தி னசரி சந்தையில் சுங்க வரி வசூலிப்பதில் பெரும் முறைகேடு நடக்கிறது. வசூலிக்கும் பணம் எங்கே செல்கிறது என தெரியவில்லை.
தியாகராஜன் (தி.மு.க.,): 13 வது வார்டில் உள்ள ஆசிரியர் காலனி பெயரில் மாற்றம் வேண்டாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த காலனியில் மக்கள் எந்த பாகுபாடும் இன்றி வசித்து வருகின்றனர்.
தர்ணா தி.மு.க., கவுன்சிலர்கள் ராம்குமார் மற்றும் சித்ரா தங்கள் பகுதி வார்டுகளில் பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். திடீரென கூடுதல் தீர்மானங்கள் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டன. அதை எதிர்த்து பா.ஜ., கவுன்சிலர் விக்னேஷ் வெளிநடப்பு செய்தார்.