/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் தாமதம் கூடாது'
/
'கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் தாமதம் கூடாது'
'கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் தாமதம் கூடாது'
'கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் தாமதம் கூடாது'
ADDED : மே 07, 2025 01:06 AM

கோவை : கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தைக் கண்டித்து, செஞ்சுலுவைச் சங்கம் அருகே, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் பின் ஈஸ்வரன் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சேரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது, கட்டாயக் கல்விச் சேர்க்கை அறிவிப்பு தாமதமடைந்ததால், மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர். எனவே, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
மத்திய அரசு நிதி வழங்கும் வரை, திட்டத்தை தமிழக அரசு தாமாக முன்வந்து தொடர வேண்டும். அதேபோல், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளிலும் இந்தச் சேர்க்கை நடைமுறைப்படுத்தப்பட, அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களிடமிருந்து மறைமுக கட்டணம் வசூலிப்பதையும் தடுக்க வேண்டும்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், ஒற்றை சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைமுறைபடுத்த வேண்டும். உயர்கல்வித் துறையில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் போன்ற உயரிய நிறுவனங்களை, கோவைக்கு கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.