/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தெய்வத்தின் மீது சந்தேகமற்ற நம்பிக்கை இருக்க வேண்டும்'
/
'தெய்வத்தின் மீது சந்தேகமற்ற நம்பிக்கை இருக்க வேண்டும்'
'தெய்வத்தின் மீது சந்தேகமற்ற நம்பிக்கை இருக்க வேண்டும்'
'தெய்வத்தின் மீது சந்தேகமற்ற நம்பிக்கை இருக்க வேண்டும்'
ADDED : ஜன 09, 2024 12:51 AM

கோவை;''தெய்வத்தின் மீது சந்தேகமற்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும் அதுதான் உண்மையான தெய்வ பக்தி,'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கிக்கானி பள்ளியில் நடந்து வரும், 'எப்போ வருவாரோ' ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில், 'பாண்டிச்சேரி அன்னை' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது:
அரவிந்தருக்கு சிஷ்யையாக வந்து, அவரோடு வாழ்ந்து அவருக்கு இணையாக தெய்வமானவர் அன்னை. அரவிந்தர் அன்னை ஒரு அவதாரம். நமக்கு நிம்மதியை தருவதற்காகவே அவதாரம் எடுத்தவர். வாழ்க்கையை எப்படி பார்க்க வேண்டும் என்பதை, அன்னையின் தத்துவம் கற்றுக்கொடுக்கிறது.
'எந்த செயலும் நம்மால் நடப்பதில்லை. இயற்கையின் வழியாக அது நடக்கிறது. நம்மை மீறி நடக்கும் விஷயங்களுக்கும் நாம் பொறுப்பில்லை. அவை எல்லாம் கடவுளின் சித்தம்' என்று சொன்னார்.
தெய்வ பக்தி எப்படி இருக்க வேண்டும் என்றால், தெய்வத்தின் மீது சந்தேகமற்ற உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும். அதுதான் உண்மையான பக்தி. ராமருக்கு கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, வரலாற்று சிறப்பு மிக்க காலத்தில் நாம் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இப்போது நம் தேசம் எங்கும், ராம நாமம் தான் ஒலிக்கிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.