/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் விற்பனை விலையில் இந்த வாரம் மாற்றமில்லை
/
இளநீர் விற்பனை விலையில் இந்த வாரம் மாற்றமில்லை
ADDED : ஏப் 21, 2025 09:39 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் கிடையாது, என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில் எவ்வித மாற்றமும் இன்றி, 46 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாய்.
சங்கம் நிர்ணயிக்கும் விலையையே, விவசாயிகளுக்கு வியாபாரிகள் வழங்க வேண்டும். வெட்டுக் கூலி மற்றும் இதர செலவுகள் வியாபாரியை சார்ந்தது. எடைக்கு வெட்டும் போது, எந்தக்கழிவும் அளிக்க வேண்டியதில்லை.
உரிய எடைக்கு ஏற்ற தொகையை வியாபாரிகள் அளிக்க வேண்டும். தற்போதைய சூழலில், அனைத்து பகுதிகளிலும் கடுமையான வெயில் நிலவுகிறது. இளநீர் உற்பத்தி கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்தே காணப்படுகிறது.
ஆனால், தேவை மிகவும் அதிகரித்துள்ளது. இளநீர் கிடைக்காமல், லாரிகள் இயக்கமின்றி நிறுத்தப்பட்டுள்ளன. அடுத்த வாரம், நிலைக்கு ஏற்ப விலை உயர்த்தப்படும்.
மத்துார் மற்றும் கர்நாடகா சந்தைகளில் இளநீர் வரத்து மிகவும் குறைந்துள்ளது. அனைத்து வட மாநில வியாபாரிகளும், பொள்ளாச்சி பகுதிக்கு வருகின்றனர். வியாபாரிகள் பல காரணங்களைக் குறிப்பிட்டு, விலையை குறைத்து வாங்க முயற்சி செய்கின்றனர். எக்காரணத்தைக் கொண்டும், குறைந்த விலைக்கு இளநீரை விற்க வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.