/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டயபடீசை கட்டுப்பாட்டில் வைக்க இந்த 5 ஆசனங்கள் போதும்
/
டயபடீசை கட்டுப்பாட்டில் வைக்க இந்த 5 ஆசனங்கள் போதும்
டயபடீசை கட்டுப்பாட்டில் வைக்க இந்த 5 ஆசனங்கள் போதும்
டயபடீசை கட்டுப்பாட்டில் வைக்க இந்த 5 ஆசனங்கள் போதும்
ADDED : ஆக 09, 2025 11:44 PM
''ச ர்க்கரை நோயாளிகள், யோகாசன பயிற்சியை தொடர்ந்து செய்தால், நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்,'' என்கிறார், யோகா குரு குணசேகரன்.
யோகாசனத்தில், 1010 உலக சாதனைகள் செய்துள்ள, உடுமலைபேட்டையை சேர்ந்த குணசேகரன், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், ஐந்து ஆசனங்களை பற்றி விளக்கு கிறார்.''மனிதன் ஆரோக்கியமாக வாழவே, நம் முன்னோர்கள் யோகா பயிற்சியை போதித்தனர். யோகாசனம் செய்தால் நோய் வராது. உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதனால் நோயின் வீரியம் குறைந்து, விரைவில் குணமாகலாம்,''
''சர்க்கரை பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாமா''
''சர்க்கரை பாதிப்பில் இருந்து விடுபட, கட்கட்டாசனம், மச்சேந்திராசனம், சர்வாங்காசனம், மரீச்சாசனம், திரிகோணாசனம் ஆகிய ஐந்து ஆசனங்களை, முறையாக செய்து வர வேண்டும். யோகா செய்த சில மாதங்களில், அதன் பலன் தெரியவரும்,''
''சர்க்கரை நோய் உள்ளவர்கள், யூ டியூப் பார்த்து யோகா கற்கலாமா,''
''சர்க்கரை நோய் இருப்பவர்கள், ஒரு யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்து மாஸ்டர் சொல்லிக்கொடுக்கும் ஆசனங்களை, குறுகிய காலம் பயிற்சி செய்து அறிந்த பின், வீட்டில் தொடர்ந்து செய்யலாம். சாப்பிட்டு வரும் சர்க்கரை மாத்திரைகளை நிறுத்தக் கூடாது. யோகாசன பயிற்சி செய்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது. குறிப்பாக, சர்ஜரி செய்து கொண்டவர்கள் மருத்துவரிடம் கேட்டு செய்ய வேண்டும்,''.