/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி
/
தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி
ADDED : ஜன 07, 2025 11:55 PM
கோவை; ஸ்ரீ விநாயகா சி.பி.எஸ்.இ., பள்ளியின், செங்காந்தள் தமிழ் இலக்கிய  மன்றம்  சார்பில், தேவாரம், திருவாசகம், திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது.  கோவையில் இருந்து, பள்ளியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், பங்கேற்ற மாணவர்கள் பலர், தேவாரம், திருவாசகத்தை புரிந்து வெளிப்படுத்தியது நடுவர்களை கவர்ந்தது. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடுவர்களாக மங்கையர்க்கரசி அறக்கட்டளை வாணவராயன் கருணாம்பிகையின்  அறநெறி ஆசிரியர்கள் செயல்பட்டனர். பள்ளி தாளாளர் சோமசுந்தரம், நிர்வாக அலுவலர் நிர்மலா தேவி, முதல்வர் சார்லின் , தமிழ் துறைத்தலைவர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

