/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு வேலைக்கு மூனு தரப்பில் கமிஷன் கேட்குறாங்க! மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு
/
ஒரு வேலைக்கு மூனு தரப்பில் கமிஷன் கேட்குறாங்க! மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு
ஒரு வேலைக்கு மூனு தரப்பில் கமிஷன் கேட்குறாங்க! மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு
ஒரு வேலைக்கு மூனு தரப்பில் கமிஷன் கேட்குறாங்க! மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு
ADDED : மார் 08, 2024 01:11 AM
கோவை:கோவை மாநகராட்சியில், ரோடு டெண்டர் எடுப்பதற்கு மூன்று தரப்பில் இருந்து கமிஷன் கேட்பதாக, ஒப்பந்ததாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கோவை மாநகராட்சியின் பொது நிதி மற்றும் மத்திய - மாநில அரசுகள் வழங்கும் மானிய நிதி சேர்த்து, ஆண்டுக்கு ரூ.1,500 கோடி வரை டெண்டர் கோரப்பட்டு, பணிகள் செய்யப்படுகின்றன.
ஒப்பந்ததாரர்கள் 'சிண்டிகேட்' போடக்கூடாது என்பதற்காக, 'இ-டெண்டர்' நடைமுறை பின்பற்றப்படுகிறது. இம்முறையில் டெண்டர் இறுதி செய்தாலும், ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்டு, ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:
மாநகராட்சியில் ரோடு போடுவதற்கு டெண்டர் கோரினால், மூன்று தரப்பில் கமிஷன் கேட்கின்றனர்.
சென்னையில் இருந்து ஒரு தரப்பு, 10 சதவீதம் கேட்கிறது. எங்களிடம் கொடுத்தால் போதும்; மற்றவர்களுக்கு நாங்களே பிரித்துக் கொடுத்து விடுவோம்; மற்றவர்களுக்கு நீங்கள் தர வேண்டியதில்லை என்கின்றனர்.
இன்னொரு தரப்பு, 5 சதவீதம் கேட்டு அழுத்தம் கொடுக்கிறது. மூன்றாம் தரப்பாக, மக்கள் பிரதிநிதிகள் தரப்பில் இருந்தும் கேட்கப்படுகிறது.
கமிஷனாக மட்டுமே, 20 சதவீதம் வரை கேட்கின்றனர். யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
மாநகராட்சி நிர்வாகத் தரப்பில், டெண்டர் இறுதி செய்து, 'ஒர்க் ஆர்டர்' கொடுத்தாலும் கூட, கமிஷன் கேட்டு, தொடர்ந்து தொந்தரவு செய்வதால், ரோடு பணி எடுப்பதற்கு தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''60 'பேக்கேஜ்' ரோடு பணிக்கு 'ஒர்க் ஆர்டர்' வழங்கி விட்டோம்.
''வேலையை துவக்குவது தொடர்பாக, ஒப்பந்ததாரர்களை அழைத்து கூட்டம் நடத்தி, பேசிக் கொண்டிருக்கிறேன். புகார் தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்கிறேன்,'' என்றார்.

