/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவு நீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு வழங்குவதற்கு மாத்தி யோசிக்கிறாங்க!
/
கழிவு நீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு வழங்குவதற்கு மாத்தி யோசிக்கிறாங்க!
கழிவு நீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு வழங்குவதற்கு மாத்தி யோசிக்கிறாங்க!
கழிவு நீரை சுத்திகரித்து மறுபயன்பாட்டுக்கு வழங்குவதற்கு மாத்தி யோசிக்கிறாங்க!
UPDATED : ஜன 07, 2025 07:52 AM
ADDED : ஜன 07, 2025 07:17 AM

கோவை; ''கோவை மாநகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிக்க, ரூ.245 கோடி ஒதுக்கி, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.
'தினமலர்' நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:
கோவையில் சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரித்த கழிவு நீர் மீண்டும் ஒரு முறை சுத்திகரித்து, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வழங்கப்படும். நாளொன்றுக்கு, 2.5 கோடி லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்க, 245 கோடி ரூபாய்க்கு தமிழக அரசிடம் நிர்வாக அனுமதி பெறப்பட்டிருக்கிறது.
புதிதாக பொதுக்கழிப்பிடங்கள்
பொது சுகாதாரத்தை பேணிக்காக்க, தேவைப்படும் இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் புதிதாக கட்டப்படவுள்ளன.செயல்பாட்டில் இருப்பது புதுப்பிக்கப்படும்.பராமரிப்பு பணி மேற்கொள்ள ரூ.400 கோடிக்கு மதிப்பீடுதயாரித்துள்ளோம்.
விடுபட்ட பகுதிகளில்,குடிநீர் சப்ளை செய்ய,திட்ட அறிக்கை தயாரித்து வருகிறோம்; 130 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்க இருக்கிறது. குறிச்சி, குனியமுத்துாரில் விடுபட்ட இடங்களில் குடிநீர் வினியோகிக்க, 5.5 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன.
தொட்டிகளுக்கு தண்ணீர்
வடக்கு, கிழக்கு மண்டலங்களில், 59 தொட்டிகள், மேற்கு மண்டலத்தில், 31 தொட்டிகளுக்கு தண்ணீர் தருவிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
இதில், 9 தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டோம்; 55 ஆயிரம் இணைப்புகள் வழங்க வேண்டும்; இதுவரை எட்டாயிரம் புது இணைப்புகள் வழங்கி, தண்ணீர் கொடுத்து வருகிறோம்; மூன்று மாதத்துக்குள் அனைத்து இணைப்புகளும் வழங்கி விடுவோம். மேற்கு மண்டலத்தில், 22 ஆயிரம் இணைப்பு கொடுக்க வேண்டும்.
17 ஆயிரம் இணைப்பு வழங்கியுள்ளோம். ஒரு மாதத்துக்குள் மீதமுள்ள ஐந்தாயிரம் இணைப்பு வழங்கி, புது தொட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம்.24 மணி நேர குடிநீர் திட்ட பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
குளங்கள் மேம்பாடு
சிங்காநல்லுார் குளத்தை மேம்படுத்த,தனி திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளோம். சின்ன வேடம்பட்டி குளத்தில் எப்போதும் தண்ணீர் தேக்கியிருப்பது போல் திட்டம் தயாரித்துள்ளோம்; குளம் துார்வாரப்பட்டு தயாராக இருக்கிறது; இதுவரை தண்ணீர் வரவில்லை. தண்ணீரை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். சுத்திகரிப்பு நிலையம் கட்டி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைப்படி, சுத்திகரித்து, குளத்தில் தேக்கப்படும்.நொய்யல் ஆற்றை அளவீடு செய்து, மேம்படுத்தப்படும்.
நீர் நிலைகளுக்கு,தண்ணீர் வரும் வழித்தடங்களில் இருந்து தடைகளை அகற்றியிருக்கிறோம். இனி, கழிவு நீர் வராத அளவுக்கு ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறோம். அரசின் ஒப்புதலுக்கும், நிதி ஒதுக்கீட்டுக்கும் அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.