/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எட்டு வருஷமா இருட்டுல தவிக்கிறாங்க எப்போது கலையும் அதிகாரிகளின் உறக்கம்?
/
எட்டு வருஷமா இருட்டுல தவிக்கிறாங்க எப்போது கலையும் அதிகாரிகளின் உறக்கம்?
எட்டு வருஷமா இருட்டுல தவிக்கிறாங்க எப்போது கலையும் அதிகாரிகளின் உறக்கம்?
எட்டு வருஷமா இருட்டுல தவிக்கிறாங்க எப்போது கலையும் அதிகாரிகளின் உறக்கம்?
ADDED : மே 05, 2025 11:25 PM

அடிக்கடி நடக்கும் விபத்துகள்
ராமகிருஷ்ணா மில் - விளாங்குறிச்சி ரோடு, மக்கள் ஸ்டோர் அருகே சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையில் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. கார், வேன் வாகனங்கள் தடுமாறி செல்லும் நிலையில், இருச்சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்திற்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில், அடிக்கடி விபத்து நடக்கிறது.
- செந்தில்குமார், விளாங்குறிச்சி.
ஆக்கிரமிப்பால் நெருக்கடி
பி.என்.புதுாரையும், சீரநாயக்கன்பாளையத்தையும் இணைக்கும் சாலையாக நேதாஜி சாலை உள்ளது. போக்குவரத்து மிகுந்த இச்சாலை ஆக்கிரமிப்புகளாலும், தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களாலும் குறுகலாக உள்ளது. இதனால், காலை, மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்தும் நடக்கிறது.
- சங்கர், காந்திபுரம்.
ஆமை வேக பணியால் அவதி
ஒண்டிப்புதுார், கிருஷ்ணமநாயுடு வீதி இரண்டில், கடந்த ஆறு மாதங்களாக பாதாள சாக்கடை பணி, மந்தகதியில் நடக்கிறது. திறந்தநிலையில் உள்ள குழிகள் குழந்தைகள், வாகனஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தாக உள்ளது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூடசெல்ல முடியாத நிலை உள்ளது.
- முருகவேல், ஒண்டிப்புதுார்.
நீர் தேக்கம்; கொசுப்பெருக்கம்
கோவை மாநகராட்சி, 16வது வார்டு, டி.வி.எஸ்., நகரில் பல மாதங்களாக சாக்கடை கால்வாய் துார்வாரவில்லை. கால்வாயில் கழிவுகள் நிறைந்தும், சாக்கடையை சுற்றியும் புதர்மண்டியும் கிடக்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்பதால், இப்பகுதியில் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது.
- பிரகாஷ், டி.வி.எஸ்., நகர்.
சாலையை சீரமைக்கணும்
சித்தாபுதுார் மேம்பாலம், அய்யப்பன் கோவில் எதிரே குழாய் பதிப்பு பணிகளுக்காக தோண்டிய சாலையை, பணிகள் முடிந்த பின்பு சரியாக சீரமைக்கவில்லை. தினம், தினம் இப்பகுதியில் விபத்து நடக்கிறது. உயிர்ச்சேதங்கள் நிகழும் முன், சாலையை சீரமைக்க வேண்டும்.
- மஹத், சித்தாபுதுார்.
வீணாகும் மின்சாரம்
கோவை மாநகராட்சி, 41வது வார்டு, ஜெகதீஸ் நகர், பொன்னுசாமிநகர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக பகலிலும், இரவிலும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது. மின்சாரம் வீணாவது குறித்து அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- ரவி, பொன்நகர்.
குழந்தைகளுக்கு ஆபத்து
ஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில், பாதாள சாக்கடை மூடியில்லாமல் திறந்தநிலையில் உள்ளது. குழந்தைகள் எளிதாக உள்ளே விழுவதற்கு வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள திறந்தநிலை பாதாள சாக்கடை குழியை,மூட வேண்டும்.
- ஜனனி, ஒண்டிப்புதுார்.
கடும் துர்நாற்றம்
லிங்கனுார், அண்ணா நகர், இரண்டாவது வீதியில், பல மாதங்களாக சாக்கடையில்அடைப்பு உள்ளது. கழிவுநீர் நிரம்பி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. வீடுகளுக்குள் கழிவுநீர் செல்லும் நிலை உள்ளதால்,விரைந்து அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- மனோகரன், லிங்கனுார்.
நுாலகத்தில் அமர முடியவில்லை
ஆவாரம்பாளையம் கிளை நுாலகத்தில் உள்ள இரண்டு பேன்களும் பழுதாகியுள்ளது. இந்த கோடை காலத்தில், நுாலகத்திற்கு வருவோர் சில நிமிடங்கள் கூட உட்கார்ந்து படிக்க முடிவதில்லை. கடும் வெப்பத்தால் மாணவர்கள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
- ஜென்சி, ஆவாரம்பாளையம்.
அதிகாரிகள் குறட்டை
மதுக்கரை மார்க்கெட், பாலத்துறை ரோடு, மேபிள் கார்டன் குடியிருப்பு பகுதியில் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இரவு நேரங் களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எட்டு ஆண்டுகளாக தெருவிளக்கு கோரியும் அதிகாரிகள் செவிசாய்க்க வில்லை.
- ரிஷப், மேபிள் கார்டன்.
தனித்தீவான தாகூர் நகர்
ஒண்டிப்புதுார், 57வது வார்டு, தாகூர் நகர் விரிவாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை பணிகளை விரிவுப்படுத்த வேண்டும். முக்கிய சாலைகள் அனைத்தும், தோண்டப்பட்டுள்ளதால் வெளியே செல்லவே முடியவில்லை. பணிகளின் போது குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டதால், பல இடங்களில் குடிநீர் விநியோகமும் செய்யப்படவில்லை.
- சவுந்திரவேல், ஒண்டிப்புதுார்.