/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாரிசு சான்றுக்கு ஓராண்டாக நடையாய் நடக்கிறார்கள்
/
வாரிசு சான்றுக்கு ஓராண்டாக நடையாய் நடக்கிறார்கள்
ADDED : ஏப் 30, 2025 12:12 AM

கோவை, ; வாரிசு சான்று கேட்டு, கடந்த ஓராண்டாக நடையாய் நடக்கின்றனர், கோவை கிணத்துக்கடவை சேர்ந்த லோகநாயகி குடும்பத்தினர்.
கோவை கிணத்துக்கடவை சேர்ந்தவர் லோகநாயகி. இவரது தாயார் பார்வதியம்மாள். இவர் கடந்த ஆண்டு வயோதிகம் காரணமாக காலமாகிவிட்டார்.
இவரது பெயரில் உள்ள சொத்துக்களையும், வங்கியில் இருக்கும் தொகையையும் எடுக்க, இவரது மகள் லோகநாயகி, வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்தார்.
விண்ணப்பங்களை பெற்ற வருவாய்த்துறையினர், விசாரணை மேற்கொண்டபோது, யாரோ சிலர் கொடுத்த தவறான தகவல்களை வைத்து, வாரிசு சான்றிதழ் கொடுக்க மறுத்துள்ளனர். அதனால் தொடர்ந்து கலெக்டரிடமும், கோட்டாட்சியரிடமும் லோகநாயகியின் மகள் கவுதமி உள்ளிட்ட உறவினர்கள் வாரந்தோறும், மனு கொடுத்து வருகின்றனர்.
அதிகாரிகள், விண்ணப்பத்தின் மீது நியாயமான விசாரணை மேற்கொண்டு, உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்பதே, லோகநாயகி குடும்பத்தாரின் கோரிக்கை.

