/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பையை எரிக்காமல் வழங்கினர்; இலவசமாக பெற்றனர் இரு தொட்டி
/
குப்பையை எரிக்காமல் வழங்கினர்; இலவசமாக பெற்றனர் இரு தொட்டி
குப்பையை எரிக்காமல் வழங்கினர்; இலவசமாக பெற்றனர் இரு தொட்டி
குப்பையை எரிக்காமல் வழங்கினர்; இலவசமாக பெற்றனர் இரு தொட்டி
ADDED : ஜன 14, 2025 11:55 PM
கோவை; புகையில்லா போகி கொண்டாடும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குப்பையை தரம் பிரித்து கொடுத்தவர்களுக்கு, இரு வண்ண பிளாஸ்டிக் தொட்டி, மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.
கோவை நகர் பகுதியில், பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்தவர்கள், பழைய பொருட்களை எரிக்காமல் இருக்கவும், வீதி வீதியாக வரும் துாய்மை பணியாளர்களிடம் வழங்கவும், மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கென தனி வாகனம் ஒதுக்க, சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, 62, 63, 64, 65வது வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தில் சென்று, பொதுமக்களிடம் தனியாக குப்பை சேகரிக்கப்பட்டது.
தரம் பிரித்து குப்பை வழங்கிய பெண்களுக்கு, மாநகராட்சி சார்பில் இரு வண்ண பிளாஸ்டிக் தொட்டி இலவசமாக வழங்கப்பட்டது.
பொது இடங்களிலும், காலியிடங்களிலும் குப்பையை எரிப்பதை, பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அவற்றை துாய்மை பணியாளர்களிடம் வழங்கி, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன், துாய்மை காவலர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.