/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டனை வழங்கியதால் பழிதீர்க்க கோர்ட்டில் 'கை வைத்த' திருடன்
/
தண்டனை வழங்கியதால் பழிதீர்க்க கோர்ட்டில் 'கை வைத்த' திருடன்
தண்டனை வழங்கியதால் பழிதீர்க்க கோர்ட்டில் 'கை வைத்த' திருடன்
தண்டனை வழங்கியதால் பழிதீர்க்க கோர்ட்டில் 'கை வைத்த' திருடன்
ADDED : ஆக 27, 2025 03:10 AM
போத்தனுார்:தனக்கு தண்டனை கொடுத்த கோவை மதுக்கரை மாஜிஸ்திரேட் கோர்ட்டை பழி வாங்கும் நோக்கில், பூட்டிய கோர்ட் அறையை திறந்து, ஐபோன்கள் மற்றும் ஆவணங்களை திருடியவர், போலீசாரிடம் வசமாய் சிக்கினார்.
கோவை மாவட்டம், மதுக்கரை மார்க்கெட் பகுதியில், குற்றவியல் மற்றும் உரிமையியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், ஆக., 15ல் சுதந்திர தின விழா கொண்டாடிய பின், மதியம் அனைத்து அறைகளையும் பூட்டி சென்றனர்.
மறுநாள் காலை, தலைமை எழுத்தர் ஷர்மிளாவின் அறை கதவு திறந்த நிலையில் இருந்தது. அறைக்குள், பீரோவில் உள்ள 'சிடி' பைல் கலைந்த நிலையில் இருந்தது. மதுக்கரை போலீசார் விசாரித்தனர்.
ஈச்சனாரி அடுத்த தனியார் பல்கலை அருகே உள்ள ஹோட்டல் முன், பைக்கில் வந்தவரிடம் நடத்திய சோதனையில், ஆறு ஐ போன் உட்பட ஏழு அலைபேசிகள், வருகை பதிவேடு, முத்திரை பதிவேடு, சலான், போலீஸ் ஸ்டேஷன்களின் குற்றப்பதிவு விபர கட்டுகள் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், தென்காசி மாவட்டம், இடைகாலை சேர்ந்த பால்தினகரன், 35, என தெரிந்தது. அவரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.
பால் தினகரன், போத்தனுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதும், மதுக்கரை கோர்ட்டில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், சிறையில் இருந்து வெளியே வந்த அவர், தனக்கு தண்டனை கொடுத்த கோர்ட்டை பழிவாங்கும் எண்ணத்தில், ஆவணங்களை திருடிச்சென்றதும் தெரியவந்தது.