/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்திரப்பதிவுக்கு செல்லும் போது அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்
/
பத்திரப்பதிவுக்கு செல்லும் போது அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்
பத்திரப்பதிவுக்கு செல்லும் போது அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்
பத்திரப்பதிவுக்கு செல்லும் போது அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்
ADDED : மார் 15, 2024 08:26 PM
வீடு, மனை வாங்கும் போது அதற்கான பத்திரப்பதிவை மேற்கொள்வதில் பல்வேறு விஷயங்களை துல்லியமாக கவனிக்க வேண்டும். பத்திரத்தில் என்னென்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பதற்கு, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன என்றாலும், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பத்திரப்பதிவு விஷயத்தில், பெரும்பாலும் ஆவண எழுத்தர்கள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார்கள் என்று, மக்கள் அலட்சியமாக இருக்கின்றனர்.
கிரைய பத்திரம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை, ஆவண எழுத்தர்கள் கவனித்துக்கொள்வர் என்றாலும், மக்கள் சில நடைமுறை விஷயங்களை, அறிந்திருக்க வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, சொத்து விற்பனையின் போது, அதன் மதிப்பில், ஏழு சதவீதம் முத்திரைத்தீர்வையாகவும், நான்கு சதவீதம் பதிவுக்கட்டணமாகவும் செலுத்த வேண்டும். இத்தொகையை செலுத்துவதற்கு, பதிவுத்துறை உரிய வசதிகளை செய்துள்ளது.
முத்திரைத்தீர்வைபத்திரப்பதிவு கட்டணங்களை, மதிப்பீடு செய்து அத்தொகைக்கு முத்திரைத்தாள்கள் வைப்பது, பல ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது.
ஆனால், தற்போது சொத்து மதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சில இடங்களில் இரண்டு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
உயர்ந்த மதிப்புக்கும் முத்திரைத்தாள் வாங்க வேண்டும் என்பதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. எனவே, இத்தொகையில் 50,000 ரூபாய் அளவுக்கு முத்திரைத்தாள்களை வாங்கிக்கொண்டு, மீதி தொகையை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.
முத்திரைத்தீரவை பதிவு கட்டணத்தின் மொத்த தொகையையும், ஆன்லைன் முறையில் வங்கியில் செலுத்தலாம் அல்லது இ-ஸ்டாம்பிங் முறையில் செலுத்தலாம்.
இருப்பினும், குறிப்பிட்ட தொகைக்கு முத்திரைத்தாள்கள் இருந்தால் தான், சொத்து பத்திரத்துக்கு ஒரு மதிப்பு இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் காணப்படுகிறது.
பத்திர தயாரிப்பு நிலையில்ஏற்படும் சந்தேகங்களுக்கு, சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகலாம் அல்லது பதிவுத்துறையின் வழிகாட்டி மையத்தை அணுகி, தெளிவு பெறலாம் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.

