/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆழமாக சிந்தித்தால்தான் புதிய படைப்பு கிடைக்கும்'
/
'ஆழமாக சிந்தித்தால்தான் புதிய படைப்பு கிடைக்கும்'
ADDED : செப் 25, 2024 12:08 AM

கோவை, : கோவை ஹிந்துஸ்தான் கல்லுாரி விஷூவல் கம்யூனிகேஷன் துறை, சென்னை பொருளாதார மற்றும் கலாசார மையம் சார்பில், சர்வதேச திரைப்பட விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக, 'குரங்கு பொம்மை' மற்றும் 'மகாராஜா' திரைப்பட இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ''ஆர்வம் தான் அனைத்தையும் சாதிக்க வைக்கும். ஆர்வத்துடன் உழைப்பும் சேர்ந்தால், உயர்வுக்கு செல்லலாம். மற்றவர்கள் சிந்திப்பதை விட, ஆழமாக சிந்தித்தால் புதிய படைப்பு கிடைக்கும். இன்று மொபைல்போன் கையில் இருந்தால் போதும். சிறந்த படத்தை எடுக்கலாம். சிறிய படைப்பு தான் வெற்றிக்கான துவக்கம்,'' என்றார்.
முன்னதாக, விஷூவல் கம்யூனிகேஷன் துறை தலைவர் ஜான் ஆன்டனி ராஜா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் முன்னாள் செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில், மாணவர்களுடன் இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் கலந்துரையாடினார். மூன்று நாட்கள் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், ஐந்து தைவான் நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.