/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் மாணவர் பிரதீப் அபார ஆட்டம்
/
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் மாணவர் பிரதீப் அபார ஆட்டம்
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் மாணவர் பிரதீப் அபார ஆட்டம்
மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் மாணவர் பிரதீப் அபார ஆட்டம்
ADDED : மார் 20, 2024 12:34 AM
கோவை;மாவட்ட அளவிலான மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், பிரதீப்பின் அபார பந்து வீச்சு கைகொடுக்க, ரெயின்போ கே.எம்.பி., அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என். தாமோதரன் வெல்பேர் டிராபிக்கான' மூன்றாம் டிவிஷன் லீக் போட்டி நடந்தது.
இதில், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்தில் நடந்த போட்டியில், ரெயின்போ கே.எம்.பி., கிரிக்கெட் கிளப் மற்றும் கொங்கு கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, கே.எம்.பி., அணியினர் 32.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆயினர். கொங்கு அணியின் ராம்கி, மோகன் ராஜ் ஆகியோர் தலா மூன்று விக்கெட் வீழ்த்தினர். ரெயின்போ அணிக்கு முகேஷ், 30 ரன்கள் சேர்த்தார்.
வெற்றி பெற 86 ரன்கள் மட்டுமே தேவை என்ற, எளிய இலக்குடன் களமிறங்கிய கொங்கு சி.சி., அணியினர் பிரதீப் பந்து வீச்சில் வீழ்ந்தனர்.
இதனால், கொங்கு சி.சி., அணி 18 ஓவர்களில் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக பந்து வீசிய பிரதீப் ஏழு விக்கெட் வீழ்த்தினார். நிவாஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
பொள்ளாச்சி என்.ஐ.ஏ., மைதானத்தில் நடந்த, மற்றொரு போட்டியில் என்.ஐ. ஏ., கல்வி குழும அணி, 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த என்.ஐ.ஏ., அணி, 49.5 ஒவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது.
அணிக்காக மாதேஷ் (54), கிருத்திக் வைஷ்ணவ் (65), விஜயகுமார் (54) ஆகியோர் அரை சதம் அடித்தனர். மிராக்கிள் அணியின் ரஞ்சித், மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து விளையாடிய மிராக்கிள் அணி, 33 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. என்.ஐ.ஏ., அணியின் அசோக் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.

