/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எறிபந்து போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவை பள்ளி
/
எறிபந்து போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவை பள்ளி
எறிபந்து போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவை பள்ளி
எறிபந்து போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவை பள்ளி
ADDED : பிப் 18, 2025 11:22 PM

கோவை; தேனியில் நடந்த எறிபந்து போட்டியில், ஸ்ரீமதி பத்மாவதி அம்மாள் பள்ளி, மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளது.
பள்ளிக் கல்வி துறை சார்பில், தேனி மாவட்டத்தில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான குடியரசு தின விளையாட்டு போட்டி நடந்தது. இதில் எறிபந்து போட்டியில், ஸ்ரீமதி பத்மாவதி அம்மாள் பள்ளி அணி, 2-0 என்ற செட் கணக்கில், விழுப்புரம் மாவட்ட அணியை வென்றது.
அதே போல், கரூர் மாவட்ட அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும், திருவள்ளூர் அணியை, 2-0 என்ற செட் கணக்கிலும் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. துாத்துக்குடி மாவட்ட அணியுடன் அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், சென்னை அணியை, 2-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற அணியினரை, பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி, உடற்கல்வி ஆசிரியர்கள் தினேஷ், லோகேஷ்வரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.