/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா 12ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம்
/
கோவில்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா 12ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம்
கோவில்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா 12ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம்
கோவில்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா 12ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம்
ADDED : மே 06, 2025 11:25 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில்களில், சித்ரா பவுர்ணமி திருவிழா நடக்கிறது.
பொள்ளாச்சி, பாலமாணிக்கம் வீதி காமாட்சியம்மன் கோவிலில், 24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்கம் சார்பில், சித்ரா பவுர்ணமி திருருவிழா நடத்தப்படுகிறது.
வரும் 10ம் தேதி, காலை, 8:30 மணிக்கு, காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, தெய்வக்குளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க செல்லுதல், மாலை, 7:00 மணிக்கு சக்தி கும்பம் ஸ்தாபனம் செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வரும், 11ம் தேதி, காலை, மாவிளக்கு, பொங்கல் வழிபாடு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. 12ம் தேதி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், காலை, 9:00 மணிக்கு காமாட்சியம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
அதன்பின், காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாண விருந்து நடைபெறுகிறது. இதில், அறுசுவை உணவுகள் பரிமாறப்படுகிறது.
அன்று, மாலை, 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இதில், தவில், நாதஸ்வரம் மேளதாளங்களும், சிங்காரி மேளம் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டமும் வீதி உலாவில் இடம் பெறுகிறது. இரவு, 8:00 மணிக்கு கலைநிகழ்ச்சியும் அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.
வரும், 13ம் தேதி காலை மகா அபிஷேகம், மதியம் வெள்ளி, தங்க கவச சிறப்பு அலங்காரம், மகா நெய்வேத்தியம் செய்து சுவாமிக்கு தீபாராதனை சமர்ப்பிக்கப்படுகிறது.
* பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு, விண்ணளந்த காமாட்சியம்மன் உடனமர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழாவில், நாளை காலை, சுத்த புண்ணியாகவாசனம், கணபதி ேஹாமம், நோன்பு சாட்டுதல், கொடியேற்றுதல் நடக்கிறது. 11ம் தேதி கணபதி ேஹாமம், அபிேஷகம், அலங்கார பூஜை, தீர்த்தம் எடுத்தல் மற்றும் கும்ப ஸ்தாபனம் நடக்கிறது.
வரும், 12ம் தேதி காலை, மகா கணபதி ேஹாமம், நவகிரக சாந்தி, மாங்கல்ய சுக்த பாராயணம், திருமாங்கல்யதாரணம், திருக்கல்யாணம ேஹாற்சவம் நடக்கிறது. காமாட்சியம்மன், ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கின்றனர்.
மதியம், மகா அபிேஷகம், அலங்கார பூஜை மற்றும் மஞ்சள் நீராடுதல் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு பூஜை, பிரசாதம் வழங்குதல், இரவு பல்லக்கில் அய்யன், அம்மனும் திருவீதி உலா வருதல் மற்றும் ஊஞ்சல் உற்சவம், பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவடைகிறது.