/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
/
உத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED : பிப் 16, 2025 10:43 PM

வால்பாறை ;உத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நடந்த திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை அண்ணாநகர் உத்ரகாளியம்மன் கோவிலின், 46வது ஆண்டு திருவிழா கடந்த, 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் 14ம் தேதி இரவு, 12:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து, சக்தி கும்பம் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை, 11:30 மணிக்கு பக்தர்கள் திருமண சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
பூசாரி நாட்ராயசாமி தலைமையில், திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து நடந்த அன்னதானத்தில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, கோவில் தலைவர் மீனாம்மாள், தர்மகர்த்தா செல்வநாயகி ஆகியோர் செய்திருந்தனர்.

