ADDED : மே 08, 2025 12:44 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ஜோதிநகர் படிகள் படிப்பகத்தின், 27வது நிகழ்வாக உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. படிகள் படிப்பகத்தின் நிறுவனர் ஜெயக்குமார் வரவேற்றார்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் செயலாளர் பூபாலன் பேசுகையில், ''மேலை நாடுகளிலும் அம்பேத்கர் சிலை உள்ளது என்றால், அதற்கு அடிப்படை காரணம் வாசிப்பு தான். நாம் எந்த நிலையாக இருந்தாலும், உயர்நிலைக்கு செல்வதற்கு வாசிப்பு மிகவும் முக்கியமாகும்,'' என்றார்.
கவிஞர் சோலைமயாவன் பேசுகையில், ''நீங்கள் எந்த தொழில் செய்தாலும், அதில் நியாயத்துக்கு கேள்விகள் தொடுக்க வேண்டுமென்றால் நீங்கள் வாசித்தாக வேண்டும்,'' என்றார்.
கவிஞர் வீரவேல் நன்றி கூறினார். குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
