/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம்
/
அரசு பள்ளி மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம்
ADDED : அக் 23, 2025 11:49 PM

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் ரோட்டரி கிளப் மற்றும் வைகறை கவி மன்றம் இணைந்து, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு, திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
தொண்டாமுத்தூர் ரோட்டரி கிளப் மற்றும் வைகறை கவி மன்றம் இணைந்து, ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கும் விழா மற்றும் மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இவ்விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் ரஹீமா பேகம் வரவேற்புரையாற்றினார். தொண்டாமுத்தூர் ரோட்டரி கிளப் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில், கவிஞர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு, திருக்குறள் புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இவ்விழாவில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

