/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருக்குறள் கும்மியாட்டம்; அசத்திய 400 பேர்
/
திருக்குறள் கும்மியாட்டம்; அசத்திய 400 பேர்
ADDED : நவ 24, 2024 11:38 PM

அன்னுார்; அன்னுாரில் திருக்குறள் பாடலுக்கு ஏற்ப, 400 பேர் கும்மியாட்டம் ஆடி அசத்தினர்.
அன்னுார், கட்டபொம்மன் நகர் பகுதியில், வள்ளி முருகன் கலைக்குழு சார்பில், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என 400 பேருக்கு, கடந்த 45 நாட்களாக, திருக்குறள் கும்மி மற்றும் வள்ளி கும்மி பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு அரங்கேற்றம் நடந்தது.
முளைப்பாரி எடுக்கப்பட்டு, விநாயகர் வழிபாடு நடந்தது. மாலை 6:30 மணிக்கு, திருக்குறள் கும்மி மற்றும் வள்ளி கும்மி துவங்கியது.
திருக்குறளுக்கு ஏற்பவும், வள்ளி கும்மி பாடல்களுக்கு ஏற்பவும், கைகளை மேலும் கீழும், இடமும் வலமும் என உயர்த்தி, தாழ்த்தி, நளினமாக ஆடி அசத்தினர். ஆறு வயது சிறுமி முதல் 60 வயது மூதாட்டி வரை, மூன்று மணி நேரம் கும்மியாட்டம் ஆடி, பார்வையாளர்களை பரவசப்பட வைத்தனர்.
அரங்கேற்ற முடிவில், ஆசிரியர் பழனிச்சாமி, இணை ஆசிரியர்கள் ரங்கநாதன், தயாநிதி, பிரீத்தி, சுபிக்ஷா, மெய்யரசு ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் கும்மியாட்டத்தை கண்டு ரசித்தனர்.