/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் திருக்குறள் திட்ட பயிலரங்கம்
/
கல்லுாரியில் திருக்குறள் திட்ட பயிலரங்கம்
ADDED : ஜன 03, 2026 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை ஸ்ரீ ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் திட்ட பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா, திருக்குறளின் சிறப்புகள் குறித்து தலைமை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி முன்னிலை வகித்தார்.
தமிழ்த்துறை இணை பேராசிரியர் செடிப்பவுன் வரவேற்றார். திருக்குறளின் பெருமைகள் குறித்து எழுத்தாளர் துரைஅங்குசாமி, செம்மொழி தமிழ் ஆய்வு மைய பேராசிரியர் சிந்தாமணி பேசினர்.
அரசு கலைக்கல்லுாரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் பேசினர். ஏற்பாடுகளை கல்லுாரி பேரவையினர் செய்திருந்தனர்.

