/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனி மாத திருமஞ்சன விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
/
ஆனி மாத திருமஞ்சன விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆனி மாத திருமஞ்சன விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆனி மாத திருமஞ்சன விழா; கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 02, 2025 09:39 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், ஆனி மாத திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், ஆனி உத்திரத்தையொட்டி திருமஞ்சன விழா நடந்தது. விழாவில், நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் நடராஜப்பெருமாள் அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி அருள்ஜோதிநகர் சிவகண கைலாய வாத்தியதிருகூடத்தில், பைஞ்சிலி நாயகி உடனமர் ஆடல் வல்லார் ஆண்டு விழா, ஆனி திருமஞ்சமன், புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.விழாவையொட்டி கணபதி ேஹாமம், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிவகண கைலாய வாத்தியங்கள் முழுங்க, சுவாமி திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடராஜ சுவாமிக்கும், சிவகாமியம்மனுக்கும் ஆனி திருமஞ்சனம் விசேஷமாக நடத்தப்படுகிறது. நேற்று, சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவிலில், நடராஜ சுவாமிக்கும், சிவகாமியம்மனுக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி நடந்த பல்வேறு சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.
இதே போல், உடுமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களிலும், ஆனி திருமஞ்சனம் நடைபெற்றது.