/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருநீல கண்டியம்மன் கோவில் ஆண்டு விழா
/
திருநீல கண்டியம்மன் கோவில் ஆண்டு விழா
ADDED : ஜூலை 18, 2025 09:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, செட்டிபாளையம் அருகே ஊத்துக்காடு பகுதியிலுள்ள திருநீல கண்டியம்மன், திருநீல கண்டீஸ்வரர் கோவிலின், மூன்றாமாண்டு விழா நேற்று காலை, உப்புக்கிணறு ஆதிவினாயகர் கோவிலிலிருந்து, பால் குடம் எடுத்து வருதலுடன் துவங்கியது.
இதையடுத்து வேள்வி, பலவித பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் நடந்தன.
தொடர்ந்து , திருநீல கண்டியம்மன், திருநீல கண்டீஸ்வரர் ஆகியோருக்கு நிறைகுட நீராட்டு நடந்தது.
மதியம் அலங்காரம், பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்டவை நடந்தன.
அன்னதானம் வழங்கப்பட்டது. திரளானோர் பங்கேற்றனர்.