/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பரங்குன்றம் விவகாரம்; ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
திருப்பரங்குன்றம் விவகாரம்; ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரம்; ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் விவகாரம்; ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 04, 2025 11:55 PM

- நிருபர் குழு -
திருப்பரங்குன்றம் விவகாரத்தை கண்டித்து, பொள்ளாச்சியில் ஹிந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் அறப்போராட்டத்தில் பங்கேற்க, நேற்று, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் பலர், செல்ல முயற்சித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் ஹிந்து முன்னணி மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக நடந்தது.
அதில், கோட்ட செயலாளர் பாலச்சந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் ரவி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மாவட்ட செயலாளர் கருணாகரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 31 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருச்செந்துார் ரயில் வாயிலாக திருப்பரங்குன்றதுக்கு செல்ல முற்பட்ட சிவனடியார்கள், 10 பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.
ஆனைமலை
ஆனைமலை முக்கோணத்தில், ஹிந்து முன்னணி சார்பில், தெற்கு மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, ஹிந்து முன்னணி நிர்வாகிகள், 17 பேரை ஆனைமலை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை
வால்பாறையில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவில் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஹிந்து முன்னணி வால்பாறை நகர தலைவர் சதீஸ், பொதுச்செயலாளர் லோகேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி நிர்வாகிகள், 10 பேரை, வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
பா.ஜ., ஆர்ப்பாட்டம் ரத்து
'குன்றம் குமரனுக்கு' என்ற கோஷம் முழங்க, மாலை, 4:30 மணிக்கு பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
ஆனால், நேற்று மாலை மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியதால், வால்பாறையில் நேற்று மாலையில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டதாக, மண்டல் தலைவர் பாலாஜி தெரிவித்தார்.
உடுமலை
திருப்பரங்குன்றம் மலையை காப்பாற்ற வலியுறுத்தி, உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் தலைமை வகித்தார். அனுமதியின்றி போராட்டம் நடத்திய, 16 பேரை உடுமலை போலீசார் கைது செய்தனர்.