/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படிகள் படிப்பகத்தில் திருவள்ளுவர் தின விழா
/
படிகள் படிப்பகத்தில் திருவள்ளுவர் தின விழா
ADDED : ஜன 18, 2024 12:24 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி படிகள் படிப்பகத்தில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது. இலக்கிய வட்ட தலைவர் அம்சப்பிரியா தலைமை வகித்தார். நிர்வாக ஆசிரியர் அறவொளி முன்னிலை வகித்தார்.
முன்னதாக, படிப்பக நிறுவனர் கவிஞர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். விழாவில், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், அனைவரது வாழ்க்கைக்கும் உறுதுணையாக அமையும். தினம் ஒரு குறளை வாசிக்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டது.
மேலும், 1,330 குறள் எழுதிய மாணவி அபிக்கு, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன. அறிவொளி சுப்ரமணியன், இசை ஆசிரியர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.