/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருவேங்கட பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா
/
திருவேங்கட பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா
திருவேங்கட பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா
திருவேங்கட பெருமாள் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா
ADDED : டிச 10, 2025 08:23 AM
அன்னூர்: சொக்கம்பாளையம் திருவேங்கடநாத பெருமாள் கோயில், மண்டல பூஜை நிறைவு விழா, வரும் 13ம் தேதி நடைபெறுகிறது.
சொக்கம்பாளையம், குப்புசெட்டி தோட்டத்தில், நூறு ஆண்டுகள் பழமையான திருவேங்கடநாத பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோயிலில், பல லட்சம் ரூபாய் செலவில், புதிதாக கர்ப்பக்கிரகம், கோபுரம் அமைக்கப்பட்டு, புதிய திருமேனிகள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 2ம் தேதி முதல் மண்டல பூஜை தினமும் காலை, நடைபெற்று வந்தது. பூஜை நிறைவு விழா வரும், 13ம் தேதி காலை 9:30 முதல், மதியம் 1:00 மணி வரை நடைபெறும். இதில் பெருமாளுக்கு, அபிஷேக பூஜை அலங்கார பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற, அறங்காவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.