/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐயப்ப சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
/
ஐயப்ப சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : டிச 13, 2025 07:53 AM

வால்பாறை: ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை விழாவை முன்னிட்டு நடந்த திருவிளக்கு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வால்பாறை நகர், வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலின், 66ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா, கடந்த, 10ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெறும் விழாவில் நாள் தோறும் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது.
நேற்று மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில், ஹிந்து தர்ம சங்கபரிவார் அமைப்பு மற்றும் அனைத்து மகளிர் குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.
இரவு, 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பசுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

