தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/‘தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழலை இந்த தலைமுறையினர் பார்க்கின்றனர்’

‘தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழலை இந்த தலைமுறையினர் பார்க்கின்றனர்’

‘தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழலை இந்த தலைமுறையினர் பார்க்கின்றனர்’


ADDED : நவ 09, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘‘ஈ.வெ.ரா., பெயரிலான நுாலக ஊழல் விவகாரத்தில், தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழலை இந்த தலைமுறையினர் நேரில் பார்க்கின்றனர்,’’ என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டி விபரம்:

போலி புத்தகங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்றே ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார். பிப்ரவரி மாதம் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, மார்ச் மாதம் புத்தகத்திற்கான பணம் கொடுக்கப்பட்டுள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, பொதுவெளியில் வந்த பின் கூட, இது, த.வெ.க., ஆட்சியில் நடந்தது என, தி.மு.க.,வினர் பழி போடுகின்றனர். அவர்களின் இந்த எண்ணத்தை மக்கள் மன்னிக்கவும், மறக்கவும் மாட்டார்கள். இது, தி.மு.க.,வுக்கு பெரிய களங்கமே.

நுாலக புத்தகங்கள் விவகாரத்தில் நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படும். ஈ.வெ.ரா.,வை கொள்கை தலைவராக த.வெ.க., ஏற்றுள்ளது. அவரது கடவுள் மறுப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை என, வெளிப்படையாக அறிவித்து அரசியல் செய்து வருகிறோம். தி.மு.க.,வை போல, பெயரளவில் ஈ.வெ.ரா.,வை ஏற்று, கடவுள் மறுப்பு பேசி, வீட்டில் சாமி கும்பிடுவது போல, போலி அரசியல் செய்ய எங்களுக்கு தெரியாது. ஈ.வெ.ரா., பெயரில் ஊழல் செய்தது வருத்தமாக உள்ளது. அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று கொடுப்பதை, தமிழ் சமூகத்திற்கு செய்யும் சேவையாக பார்க்கிறோம்.

திரிஷா, விஜய் போன்ற போலி பெயர்களில் நுால்களை எழுதியுள்ளனர். யார் பெயரை வைத்தால் சந்தேகம் வராதோ, யார் மீது குற்றம் சுமத்தலாம் என சிந்தித்து செய்துள்ளனர். தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழலை இந்த தலைமுறையினர் நேரில் பார்க்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us