/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரு டீக்கடைக்கு இவ்ளோ...வ் பெரிய இடமா! ரேஸ்கோர்ஸ் ரோட்டை ஆக்கிரமித்து நடத்தப்படும் டீ ஹவுஸ்
/
ஒரு டீக்கடைக்கு இவ்ளோ...வ் பெரிய இடமா! ரேஸ்கோர்ஸ் ரோட்டை ஆக்கிரமித்து நடத்தப்படும் டீ ஹவுஸ்
ஒரு டீக்கடைக்கு இவ்ளோ...வ் பெரிய இடமா! ரேஸ்கோர்ஸ் ரோட்டை ஆக்கிரமித்து நடத்தப்படும் டீ ஹவுஸ்
ஒரு டீக்கடைக்கு இவ்ளோ...வ் பெரிய இடமா! ரேஸ்கோர்ஸ் ரோட்டை ஆக்கிரமித்து நடத்தப்படும் டீ ஹவுஸ்
ADDED : ஏப் 19, 2025 03:13 AM

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், வார்டு சுகாதார அலுவலகத்துக்கு அருகே, 225 சதுரடிக்கு மட்டுமே டீ ஹவுஸ் நடத்த, மாநகராட்சி அனுமதி வழங்கியது. அந்த அனுமதியும், மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது.
அனுமதியின்றி நடத்தப்படும் டீ ஹவுஸை அகற்ற, நகரமைப்பு பிரிவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். கடையை சுற்றிலும் நடைபாதையை ஆக்கிரமித்து டேபிள், பெஞ்ச் போடப்பட்டு இருப்பதால், பாதசாரிகள் பயன்படுத்த முடிவதில்லை.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் சுற்றுச்சாலையை மாநகராட்சி நிர்வாகம் மேம்படுத்தியது. அதில், வார்டு சுகாதார அலுவலகம் அருகே உள்ள இடத்தில், தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் இன்டஸ்ட்டிரியனல் கோ-ஆப்ரேட்டிவ் நிர்வாகத்தினர் (தி இன்ட்கோஷர்வ்', டீ ஹவுஸ் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம், 225 சதுரடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. 'ஒதுக்கீடு செய்த இடத்தை தவிர்த்து, கூடுதலான இடம் ஆக்கிரமிக்கக் கூடாது. அவ்வாறு செய்திருந்தால் எவ்வித முன்னறிவிப்பு இன்றி உரிமம் ரத்து செய்யப்படும். ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் கடை அமைக்கக் கூடாது' என்கிற நிபந்தனைகளுடன், 2022 ஆக., 11 முதல், 2025 மார்ச் 31 வரை, மூன்றாண்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
உரிமம் தேதி முடிந்து, இரு வாரங்கள் கடந்து விட்டன. அக்கடைக்கு உரிமம் நீட்டித்து வழங்கப்படவில்லை. விதிகளை மீறியிருப்பது அப்பட்டமாக தெரிந்தும், கடையை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றவும் செய்யவில்லை.
மொத்தம், 225 சதுரடி பரப்புக்கே இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சுற்றுப்பகுதியில் டேபிள் மற்றும் சேர் போட்டு, வியாபாரம் செய்கின்றனர். கடைக்கு பின்புறம் குப்பை கொட்டுவதற்கு தொட்டி வைத்து ஆக்கிரமித்திருக்கின்றனர்.
பாதசாரிகள் நடந்து செல்ல வழியின்றி, கடையை சுற்றியுள்ள பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.