/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'இப்படித்தான் இருக்கணும் ஆசிரியப்பணி'; கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுரை
/
'இப்படித்தான் இருக்கணும் ஆசிரியப்பணி'; கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுரை
'இப்படித்தான் இருக்கணும் ஆசிரியப்பணி'; கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுரை
'இப்படித்தான் இருக்கணும் ஆசிரியப்பணி'; கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவுரை
ADDED : ஜூலை 31, 2025 10:02 PM

கோவை; நாளை சமுதாயம், தற்போதைய ஆசிரியர்களை நினைவில் கொள்ளும் படி, ஆசிரியப்பணி இருக்க வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் மற்றும் கல்லுாரி கல்வி இயக்ககம் இணைந்து, விளைவு அடிப்படையிலான கல்வி' பயிற்சி பட்டறை, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனரகத்தின் ஏற்பாட்டில், அரசு கலைக் கல்லுாரியில் நேற்று நடந்தது.
கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பக லட்சுமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கல்லுாரி கல்வி இயக்குனர் சுந்தரவல்லி, ஆசிரியப் பணியின் முக்கிய நோக்கமான கற்பித்தலில், புதுப்பித்துக் கொள்வதன் அவசியம் குறித்தும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும் கூறினார்.
மேலும், தமக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை நினைவில் கொண்டிருப்பதை போல், நாளை சமுதாயம், தற்போதைய ஆசிரியர்களை நினைவில் கொள்ளும் படி, ஆசிரியப்பணி இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவர் விஜயகுமார், புதுமைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கும் பேராசிரியர்களுக்கு, தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கூறினார்.
பயிற்சியளிக்க வந்த வல்லுனர் கண்மணி புத்தி, பாடத்திட்டம் அமைக்கும் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள், அதற்கான வழிமுறைகளை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். கோவை மண்டல கல்லுாரிகளில் பணிபுரியும் பல்வேறு துறை பேராசிரியர்கள் 75 பேர் பங்கேற்றனர்.
அரசு கலைக் கல்லுாரி முதல்வர் எழிலி நன்றி கூறினார். நிகழ்ச்சியை, கல்லுாரியின் தாவரவியல் துறை இணை பேராசிரியர் புகழேந்தி ஒருங்கிணைத்தார்.