/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இது பண்டிகை காலம்... இனி முண்டியடிக்கும் கூட்டம்; தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
/
இது பண்டிகை காலம்... இனி முண்டியடிக்கும் கூட்டம்; தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
இது பண்டிகை காலம்... இனி முண்டியடிக்கும் கூட்டம்; தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
இது பண்டிகை காலம்... இனி முண்டியடிக்கும் கூட்டம்; தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்
ADDED : அக் 02, 2025 12:37 AM

கோவை: பண்டிகை காலம் என்பதால், கோவை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் கூட நுழைய முடியாத, நெருக்கடியான பழைய வணிக வளாகங்கள் பல உள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும், கோவை டவுன்ஹால் பகுதியில் ஒரு வணிக நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது.
துரிதமாக செயல்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் கூட பெருமளவில் பொருட் சேதம் ஏற்பட்டது. தீயை முற்றிலும் அணைக்க, கிட்டத்தட்ட நான்கு மணி நேரமானது.
இப்போது தீபாவளி பண்டிகை நேரம். வணிக நிறுவனங்களுக்கு பொதுமக்கள் சாரை சாரையாக வருவர். ஒவ்வொரு நிறுவனத்துக்குள்ளும் ஆயிரக்கணக்கானோர் இருப்பர்.
ஷாப்பிங் செய்யும் மும்முரத்தில் இருக்கும் அவர்கள், பாதுகாப்பை சற்றும் உணராமல் இருப்பர். சம்பந்தப்பட்ட ஒவ்வொரு வணிக நிறுவனத்தினரும், தங்களது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறினார்.
வணிக வளாகங்கள் சிலவற்றில், அவசர கால வழி இல்லாதது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ''கோவையில், அனைத்து வணிக வளாகங்களிலும், அவசரகால வழிகள் உள்ளன. அவசர கால வழிகள் இருந்தால், மட்டுமே வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படுகிறது,'' என்றார்.
சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்ட டவுன்ஹால் பகுதி வணிக வளாகம் மற்றும் சில பழைய வணிக வளாகங்களில், அவசர கால வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆய்வு நடத்தி, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.