sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இதுதாங்க டிரெண்ட்... தீபாவளி பண்டிகையை ஒரு கலக்கு கலக்குங்க

/

இதுதாங்க டிரெண்ட்... தீபாவளி பண்டிகையை ஒரு கலக்கு கலக்குங்க

இதுதாங்க டிரெண்ட்... தீபாவளி பண்டிகையை ஒரு கலக்கு கலக்குங்க

இதுதாங்க டிரெண்ட்... தீபாவளி பண்டிகையை ஒரு கலக்கு கலக்குங்க


ADDED : அக் 12, 2024 11:24 PM

Google News

ADDED : அக் 12, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீபாவளியை முன்னிட்டு, ஜவுளிக்கடைகளுக்கு எண்ணற்ற ரகங்களில் ஆடை கலெக்சன்கள் தருவிக்கப்பட்டுள்ளன. எக்கச்சக்கமாய் கொட்டிக்கிடக்கும் ஆடைகளில் எதை எடுப்பது என குழப்பமாக இருக்கும். டிரெண்டிங்கிற்கு ஏற்ப ஆடைகளை செலக்ட் செய்பவரா நீங்கள்? அப்போ, தீபாவளி ஷாப்பிங்கிற்கு முன், பெண்களுக்கான இந்தாண்டு பேஷன் டிரெண்டுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

டிரெண்டி சேலைகள்


எப்போதும் டிரெண்டில் இருந்து விலகாத சேலைகளில், காலத்தை கடந்த அழகு உள்ளது. டிரெடிசனுடன் மார்டன் வைப்பிற்கு, பாரம்பரிய சில்க் சேலைகளுடன், ஸ்டேட்மெண்ட் பிளவுசை மேட்ச் செய்யலாம். ரெடி டூ வியர், ரவுல் சேலைகள், ஆப் பீட் சேலைகளையும் செலக்ட் செய்யலாம். அல்டிமேட் இந்தோ - வெஸ்டர்ன் அவுட்விட்டாக இருக்கும்.

மார்டன் டிவிஸ்ட் லெகங்கா


இந்த தீபாவளிக்கு, டாப் டிரெண்டிங்கில் உள்ள ஆடையாக, டிரெடிசனல் வித் மார்டன் டிவிஸ்ட் லெகங்கா உள்ளது. ராயல் ப்ளூ, எமரால்டு கிரீன், பிரைட் மஸ்டர்ட் மஞ்சள் ஆகிய போல்டு ஜூவல்லரி டோன்களை தேர்ந்தெடுக்கலாம். எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க்ஸ் லெகங்காக்கள், தீபாவளிக்கு சரியான பியூசன் ஆடையாக இருக்கும்.

அனார்க்கலி கவுன்ஸ்


ஒவ்வொரு தீபாவளியிலும் புதிய அனார்க்கலி கவுன் டிரெண்ட்ஸ் வந்துகொண்டே உள்ளது. இந்தாண்டு, விழாக்கேற்ப சிவப்பு, அடர் பச்சை போன்ற போல்டான வண்ணங்களில், எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க் அனார்க்கலி ஆடைகள் வந்துள்ளன. கூட்டத்தில் உங்களை இது தனித்துவமாக ஜொலிக்க வைக்கும்.

ஷராரா செட்ஸ்


ஷராரா அவுட்பிட்டுகள் தீபாவளி ஸ்பாட் லைட்டை உங்கள் பக்கம் திருப்பும். ஷராரா ஆடைகள் ஸ்டைலிசாக இருப்பதுடன், அணிவதற்கும் வசதியாகவும் இருக்கும். ஷராரா செட்டுடன், ஹெவி டிசைன் கொண்ட ஸ்டேட்மென்ட் துப்பட்டாவை மேட்ச் செய்வது இப்போது லேட்டஸ்ட்பேஷனாக இருக்கிறது.

ஜாக்கட் ஸ்டைல் லாங் குர்தி


எம்ப்ராய்டரி, மிரட் வொர்க் என ஹெவி டிசைன் வேண்டாம். ஆனால், தனித்துவமாக இருக்க வேண்டும். ஜாக்கட் ஸ்டைல் லாங் குர்தீஸ் பெஸ்ட் சாய்ஸ். பளாசா, ஸ்கட்ஸ், பேண்ட்ஸ் உடன் மேட்ச் செய்யலாம். ஒரே வண்ணங்களில் அணிவது இப்போது அனைவராலும் விரும்பப்படுகிறது.

இண்டோ - வெஸ்டர்ன் பியூசன்


எத்தினிக் அழகுடன் வெஸ்டர்ன் ஸ்டைலும் இணைந்து வரும், இன்டோ வெஸ்டர்ன் ஆடைகளை, பெரும்பாலானோர் தற்போது விரும்புகின்றனர்.

வெஸ்டர்ன் ஆடைகளே இந்த தீபாவளிக்கு உங்கள் தேர்வு எனில், சல்வார் ஜம்சூட், பார்டி பிராக், எத்தினிக் கவுன்ஸ், கிராப் டாப் மற்றும் பளாசோ பேண்ட் போன்றவற்றை டிரை செய்யலாம்.






      Dinamalar
      Follow us