sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இதைத் தான் நாங்கள் எல்லாம் எதிர்பார்த்தோம்: கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என உற்சாகம்

/

இதைத் தான் நாங்கள் எல்லாம் எதிர்பார்த்தோம்: கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என உற்சாகம்

இதைத் தான் நாங்கள் எல்லாம் எதிர்பார்த்தோம்: கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என உற்சாகம்

இதைத் தான் நாங்கள் எல்லாம் எதிர்பார்த்தோம்: கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என உற்சாகம்


ADDED : ஜூலை 31, 2025 11:31 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பயிர்க்கடன் பெறும் வழிமுறையில் மீண்டும் பழைய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவத்துக்கு ஏற்ப பயிர் செய்யும் வகையில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், என்.ஓ.சி., உட்பட பல நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், சிபில் ஸ்டேட்மென்ட்' வாங்க வேண்டும் என்று, கூட்டுறவு துறையால் வழங்கப்பட்ட அறிவுரை, விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

மீண்டும் பழைய நடைமுறை கொண்டு வர வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பயிர்க்கடன் பெறும் வழிமுறையில் மீண்டும் பழைய நடைமுறை செயல்படுத்தப்படும் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி கூறியதாவது:

பயிர்க்கடன் பெறுவதில் அறிவுறுத்தப்பட்ட புதிய நடைமுறையில், விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து, மாவட்ட கலெக்டர், கூட்டுறவு துறை முதன்மை செயலரிடம் முறையிட்டோம். தற்போது, பழைய நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது, விவசாயிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தான்.இவ்வாறு, அவர் கூறினார்.

விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காளிச்சாமி கூறுகையில், ஏற்கனவே என்.ஓ.சி., போன்றவை பார்க்கப்படும் போது, புதிதாக சிபில் ஸ்டேட்மென்ட்' நடைமுறை கொண்டு வந்தது, உரிய காலத்துக்குள் பயிர் செய்ய முடியுமா? என்ற நிலையை ஏற்படுத்தியது.

தற்போது வந்துள்ள சுற்றறிக்கை, எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us