/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரை, ஊசி வைத்திருந்தவர்கள் கைது
/
போதை மாத்திரை, ஊசி வைத்திருந்தவர்கள் கைது
ADDED : மே 24, 2025 11:31 PM
கோவை: போதை மாத்திரைகள், சிரிஞ்ச், ஊசி உள்ளிட்டவை வைத்திருந்த மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
போத்தனுார் போலீசார் நஞ்சுண்டாபுரம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நஞ்சுண்டாபுரம் பாலத்தின் கீழ் மூன்று பேர், சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். அவர்களிடம் சோதனை செய்த போது, போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் 120, அதை செலுத்துவதற்காக பயன்படுத்தப்படும் சிரிஞ்ச், ஊசி, சோடியம் குளோரைடு உள்ளிட்டவை இருந்தன.
அவற்றையும், மொபைல் போன்ல, ரூ.5280 பணம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, குனியமுத்துாரை சேர்ந்த அப்துல் ரகுமான், 23, லதீப், 29 மற்றும் போத்தனுாரை சேர்ந்த அன்வர் சாதீக், 31 ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.